
======================================================================
LibreOffice 3.5 என்னைப்படி
======================================================================


இந்த என்னைப்படி கோப்பு தொடர்பான புதிய விவரங்களுக்கு, காண்க http://www.libreoffice.org/welcome/readme.html

இக்கோப்பு LibreOffice மென்பொருளைப் பற்றிய முக்கியத் தகவலைக் கொண்டுள்ளது. நிறுவலைத் தொடங்குமுன் இத்தகவலைக் கவனமாக வாசிக்கப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

இம்மென்பொருளை மேம்படுத்திவரும் LibreOffice சமூகம், உங்களை உறுபினராக இணைய அழைக்கிறது. நீங்கள் புதிய பயனரென்றால், LibreOffice தளத்திற்குச் சென்று பாருங்கள். LibreOffice செயல்திட்டம் பற்றிய பல தகவலை நீங்கள் அங்கு பெறலாம். அத்திட்டத்தைச் சார்ந்த சமூகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். சுட்டி: http://www.libreoffice.org/.

உண்மையில் LibreOffice அனைவருக்கும் இலவசமா?
----------------------------------------------------------------------

LibreOffice யாவருக்கும் இலவசமாக வழங்கப்படும் மென்பொருளாகும். நீங்கள் LibreOffice இன் இந்தப் படியை எத்தை கணினியில் வேண்டுமானாலும் நிறுவலாம்; (வனிக, அரசாங்க, கல்வி உட்பட) அனைத்து தேவைக்கும் பயன்படுத்தலாம். மேலதிக தகவலுக்கு LibreOffice பதிவிறக்கத்துடன் வந்த உரிம உரையைப் பார்க்கவும்.

ஏன் LibreOffice அனைவருக்கும் இலவசம்?
----------------------------------------------------------------------

இந்த LibreOffice இலவசமாக வழங்க தனிநபர்களும் நிறுவனங்களும் இதனை வடிவமைத்து, மேம்படுத்தி, பரிசோதித்து, ஆவணப்படுத்தி, ஆதரவளித்து, சந்தைப்படுத்தி, இன்னும் பல வழிகளில் உதவியுள்ளனர். இன்று LibreOffice இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்குமான உலகின் தலைசிறந்த திறவூற்று உற்பத்தித்திறன் மென்பொருளாக விளங்குகிறது.

அவர்களின் எத்தனங்களை பாராட்டுவதோடு LibreOffice இன்னும் பல்லாண்டுகள் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பினால், தயை கூர்ந்து இத்திட்டத்திற்கு ஆதரவளியுங்கள். தகவலுக்கு http://www.documentfoundation.org/contribution/ பாருங்கள். அனைவரும் ஏதாவதொரு விதத்தில் ஆதரவளிக்கலாம்.

----------------------------------------------------------------------
நிறுவுதல் குறிப்புகள்
----------------------------------------------------------------------

LibreOffice requires a recent version of Java Runtime Environment (JRE) for full functionality. JRE is not part of the LibreOffice installation package, it should be installed separately.

முறைமை தேவைகள்:
----------------------------------------------------------------------

பொதுவாக, LibreOffice ஐப் உங்கள் லினக்ஸ் விநியோகத்தால் (எ.கா. உபுண்டு மென்பொருள் நடுவம்) பரிந்துரைக்கப்பட்ட நிறுவல் வழிமுறையில் நிறுவுதே நல்லது. ஏனெனில், உங்கள் சிஸ்டத்துக்குப் பொருத்தமான நிறுவலைப் பெறுவதற்குச் சுலபமான வழி இதுவாகத்தான் இருக்க முடியும். ஏன், நீங்கள் உங்கள் லினக்ஸ் இயங்கு தளத்தை நிறுவும்போதே LibreOffice முன்னிருப்பாக நிறுவப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புமுள்ளது.

இந்த "தனித்தியங்கும்" LibreOffice நிறுவி முன்னோட்டங்கள் தேவைப்படும் பயனர்களுக்கும், மாற்றுத் திறன்களுடைய, வழக்கத்திற்கு முரண்பட்ட பயனர்களுக்காகவும் வழங்கப்படுகிறது.

* லினக்ஸ் கெர்னல் பதிப்பு 2.6.18 அல்லது மேலே;
* glibc2 பதிப்பு 2.5 அல்லது மேலே;
* gtk பதிப்பு 2.10.4 அல்லது மேலே;
* பெண்டியத்துடன் ஒவ்வும் கணினி (பெண்டியம் III அல்லது அத்லோன் பரிந்துரைக்கப்படுகிறது)
* 256 MB RAM (512 MB RAM பரிந்துரைக்கப்படுகிறது);
* 1.55 GB வரை வன் வட்டு இடமுள்ளது;
* குறைந்தது 256 நிறங்களுடைய 1024x768 பிரிதிறன் X வழங்கி (உயர் பிரிதிறன் பரிந்துரைக்கப்படுகிறது);
* gail 1.8.6 மற்றும் at-spi 1.7 பொதிகளுடைய கனோம் 2.16 க்கு மேற்பட்ட (துணைபுரியும் தொழில்நுட்ப [AT] கருவிகளுக்கு ஆதரவளிக்கத் தேவை), அல்லது வேறொரு ஏற்புடைய GUI (எ.கா. KDE போன்றவை.)

பல விதமான லினக்ஸ் விநியோகங்களும் வேறுபட்ட நிறுவல் விருப்பத்தேர்வுகளும் (KDE, கனோம் போல) ஒரே லினக்ஸ் வணிகரிடம் கிடைக்கலாம். சில விநியோகங்கள் அவற்றின் 'சொந்த' LibreOffice பதிப்புகளுடனும் அனுப்பபடுகின்றன; இவை சமூகம்-வெளியிட்ட LibreOffice ஐக் காட்டிலும் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டிருக்கலாம். பல வேளைகளில், சமூகம்-வெளியிட்ட LibreOffice ஐ இந்த 'சொந்த' வெளியீடுகளுக்குப் பக்கத்திலேயே நிறுவலாம். ஒருகால், சமூகம்-வெளியிட்ட LibreOffice நிறுவதற்கு முன்னர் 'சொந்த' பதிப்பை அகற்ற நீங்கள் விரும்பிலாம். இதனை எவ்வாறு செய்வதென்று அறிய, லினக்ஸ் வனிகர் உங்களிடம் அளித்த பயனர் உதவி வளத்தைப் பாருங்கள்.

மென்பொருளை நீக்குவதற்கு அல்லது நிறுவதற்கு முன்னர் உங்கள் சிஸ்டத்தைக் காப்புநகலெடுப்பது நல்ல பழக்கமாகும்.

உங்கள் கணினியின் தற்காலிக அடைவில் போதுமான நினைவகம் இருப்பதையும், படிக்க, எழுத மற்றும் அணுகும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். நிறுவலைத் தொடங்கும் முன், மற்ற நிரல்கள் அனைத்தையும் மூடி விடவும்.

டெபியன்/உபுண்டு அடிப்படையிலான லினக்ஸ் கணினியில் LibreOffice ஐ நிறுவுதல்
----------------------------------------------------------------------

If you have a previous version of LibreOffice already installed, then you will need to de-install it before proceeding further. For instructions on how to install a language pack (after having installed the US English version of LibreOffice), please read the section below entitled Installing a Language Pack.

பதிவிறக்கம் செய்த ஆவணகத்தை நீங்கள் திறக்கும் போது, உள்ளடக்கங்கள் ஒரு துணை அடைவில் விரிக்கப்பட்டுள்ளதைப் பார்ப்பீர்கள். ஒரு கோப்பு மேலாளர் சாளரத்தைத் திறந்து, அடைவை "LibO_" இல் தொடங்கி, பதிப்பு எண்ணையும் தளத்தின் தகவல் சிலவற்றையும் கொண்டதாக மாற்றிவிடவும்.

இந்த அடைவு "DEBS" என்ற ஒரு துணையடைவைக் கொண்டுள்ளது. அடைவை "DEBS" அடைவுக்கு மாற்றுக.

அடைவினுள் சொடுக்கி "முனையத்தில் திற" தேர்வு செய்யவும். ஒரு முனைய சாளரம் திறக்கும். முனையத்தில் கட்டளை வரியில் இருந்து, பின்வரும் கட்டளையை (கட்டளையை செயல்படுத்தும் முன்னர், நீங்கள் உங்கள் மூல பயனர் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்) உள்ளிடவும்:

sudo dpkg -i *.deb

மேற்கண்ட dpkg கட்டளை நிறுவலின் முதல் பகுதியை செய்கிறது. பணியை முடிக்க, நீங்கள் பணிமேடை ஒருங்கிணைப்பு தொகுப்புகளை நிறுவ வேண்டும். இதனைச் செய்ய, பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தி, "DEBS" அடைவிலிருந்து "desktop-integration" க்கு அடைவு மாற்றம் செய்து கொள்ளவும்:

cd desktop-integration

இப்போது மீண்டும் dpkg கட்டளையை இயக்கு:

sudo dpkg -i *.deb

நிறுவல் இப்போது முடிந்துவிட்டது, ஆகவே, அனைத்து LibreOffice செயலிகளின் படவுருக்களும் உங்கள் பணிமேடையின் செயலிகள்/அலுவலகம் பட்டியலில் இருக்க வேண்டும்.

RPM பொதிகளைப் பயன்படுத்தி பெடோரா, சூசே, மாண்ரிவா மற்றும் இத‌ர‌ லினக்ஸ் கணினிகளில் LibreOffice நிறுவுதல்
----------------------------------------------------------------------

If you have a previous version of LibreOffice already installed, then you will need to de-install it before proceeding further. For instructions on how to install a language pack (after having installed the US English version of LibreOffice), please read the section below entitled Installing a Language Pack.

பதிவிறக்கப்பட்ட ஆவணத்தை நீங்கள் அவிழ்த்தும், உள்ளடக்கங்கள் ஒரு துணை அடைவுக்கு பிரித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்பீர்கள். கோப்பு மேலாளார் சாளரத்தைத் திறந்து, அடைவை "LibO_" என்று தொடங்கி, பதிப்பு எண்ணையும் இயங்குதளத் தகவலையும் கொண்டுள்ள ஒன்றாக மாற்றுங்கள்.

இந்த அடைவு "RPMS" என்றொரு துணை அடைவைக் கொண்டுள்ளது. அடைவை "RPMS" அடைவாக மாற்றுக.

அடைவினுள் சொடுக்கி "முனையத்தில் திற" தேர்வு செய்யவும். ஒரு முனைய சாளரம் திறக்கும். முனையத்தில் கட்டளை வரியில் இருந்து, பின்வரும் கட்டளையை உள்ளிடவும் (கட்டளையைச் செயல்படுத்தும் முன்னர், நீங்கள் உங்கள் மூல பயனர் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்):

பெடோரா-அடிப்படையிலான கட்டகங்களுக்கு: su -c 'yum install *.rpm'

மாண்ரிவா அடிப்படையிலான கட்டகங்களுக்கு: sudo urpmi *.rpm

மற்ற RPM-அடிப்படையான கட்டகங்களுக்கு (சூசே, முதலியன): rpm -Uvh *.rpm

மேற்கண்ட கட்டளை நிறுவலின் முதல் பகுதியை செய்கிறது. பணியை முடிக்க, நீங்கள் பணிமேடை ஒருங்கிணைப்பு தொகுப்புகளை நிறுவ வேண்டும். இதனை செய்ய, பின்வரும் கட்டளையை பயன்படுத்தி, "RPMS" அடைவினுள் உள்ள "desktop-integration" க்கு அடைவு மாற்றம் செய்து கொள்ளவும்:

cd desktop-integration

இப்போது மீண்டும் நிறுவல் கட்டளையை ஓட்டு:

பெடோரா-அடிப்படையிலான கட்டகங்களுக்கு: su -c 'yum install *freedesktop*.rpm'

மாண்ரிவா-அடிப்படையிலான கட்டகங்களுக்கு: sudo urpmi *mandriva*.rpm

For SUSE-based systems: rpm -Uvh *suse*.rpm

For other RPM-based systems: rpm -Uvh *freedesktop*.rpm

நிறுவல் செயல்வழி இப்போது முடிவுற்றது, அனைத்து LibreOffice செலிகளுக்கான படவுருகளும் உங்கள் பணிமேடை செயலிகள்/அலுவலக பட்டியலில் இருக்க வேண்டும்.

லினக்ஸ் விநியோகங்களுக்கான பணிபேடை ஒருமைப்பாடு பற்றிய குறிப்புகள் மேலுள்ள நிறுவல் வழிமுறையில் இடம்பெறவில்லை
----------------------------------------------------------------------

இந்த நிறுவல் வழிமுறைகளில் குறிப்பாக இடம்பெறாத இதர லினக்ஸ் விநியோகங்களில் LibreOffice ஐ நிறுவ எளிமையாக இருக்க வேண்டும். முக்கியமாக பணிமேடை ஒருமைப்பாட்டில்தான் வேறுபாடுகளைச் சந்திக்க முடியும்.

இப்பணிமேடை-ஒருங்கிணைப்பு அடைவு libreoffice3.3-freedesktop-menus-3.3.1.noarch.rpm என்ற ஒரு பொதியையும் (அல்லது அது போன்றதையும்) கொண்டிருக்கிறது. இப்பொதி, Freedesktop.org விவரக்குறிப்புகள்/ பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கும் அனைத்து லினக்ஸ் விநியோகங்களுக்குமானது (http://en.wikipedia.org/wiki/Freedesktop.org); இது மேற்கூறிய வழிமுறைகளில் இல்லாத‌ மற்ற லினக்ஸ் விநியோகங்களில் நிறுவ அளிக்கப்படுகிறது.

மொழிப் பொதி நிறுவப்படுகிறது
----------------------------------------------------------------------

நீங்கள் விரும்பிய மொழி மற்றும் தளத்திற்கான மொழிப் பொதியைப் பதிவிறக்கிக்கொள்ளுங்கள். அவை முதன்மை நிறுவல் அவணகம் உள்ள அதே இடத்திலிருந்து கிடைக்கின்றன. நௌடிலஸ் கோப்பு நிர்வாகியிலிருந்து பதிவிறக்கப்பட்ட ஆவணகத்தை ஓர் அடைவிற்கு (எ.கா. உங்கள் பணிமேடை) பிரித்தெடுங்கள். அனைத்து LibreOffice செயலிகளிலிருந்தும் (விரைவுதொடங்கி உட்பட) நீங்கள் வெளியேறிவிட்டதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

பதிவிறக்கிய மொழிப் பொதியை நீங்கள் பிரித்தெடுத்த‌ அடைவுக்கு அடைவை மாற்றவும்.

இப்போது பிரித்தெடுக்கும் போது உருவாக்கப்பட்ட அடைவுக்கு அடைவை மாற்றுங்கள். எடுத்துக்காட்டிற்கு, ஒரு 32-பிட் டெபியன்/உபுண்டு அடிப்படையிலான கட்டகத்திற்கான பிரஞ்சு மொழி பொதிக்கு, அடைவு LibO_ என்ற பெயரையும் சில பதிப்பு தகவலையும், Linux_x86_langpack-deb_fr உம் கொண்டிருக்கும்.

இப்போது அடைவை நிறுவவுள்ள பொதிகளைக் கொண்டிருக்கும் அடைவுக்கு மாற்றவும். டெபியன்/ உபுண்டு அடிப்படையிலான கட்டகங்களில், DEBS அடைவாக இருக்கும். பெடோரா, சூசே அல்லது மாண்ட்ரிவா கட்டகங்களில், RPMS அடைவாக இருக்கும்.

நாட்டிலஸ் கோப்பு மேலாளரில், அடைவை வலம்-சொடுக்கி "முனையத்தில் திற" என்ற கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் சற்று முன்னர் திறந்த‌ முனையத்தில், மொழி பொதியை நிறுவும் கட்டளையை செயல்படுத்தவும் (கீழ்கண்ட‌ கட்டளைகள் அனைத்துக்கும், நீங்கள் மூல பயனர் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டி இருக்கலாம்):

டெபியன்/ உபுண்டு அடிப்படையிலான கட்டகங்களுக்கு: sudo dpkg -i *.deb

பெடோரா அடிப்படையிலான கட்டகங்களுக்கு: su -c 'yum install *.rpm'

மாண்ரிவா அடிப்படையிலான கட்டகங்களுக்கு: sudo urpmi *.rpm

மற்ற RPM-பயன்படுத்தும் கட்டகங்கள் (சூசே, முதலியன): rpm -Uvh *.rpm

இப்போது ஏதாவதொரு LibreOffice செயலியை -- எ.கா. ரைட்டரை -- தொடக்குங்கள். கருவிகள் பட்டிக்குச் சென்று விருப்பத்தேர்வை தேர்க. விருப்பத்தேர்வு உரையாடல் பெட்டியில், "மொழி அமைவுகள்" ஐச் சொடுக்கிய பின் "மொழிகள்" ஐச் சொடுக்குக. "பயனர் முகப்பு" பட்டியலைக் கீழிறக்கி, நீங்கள் சற்று முன்னர் நிறுவிய மொழியைத் தேர்க. நீங்கள் வேண்டினால், அதே செயலை "இட அமைவு", "முன்னிருப்பு நாணயம்", "ஆவண முன்னிருப்பு மொழிகள்" ஆகியவற்றிற்கும் செய்க.

அந்த அமைவுகளைச் சரிசெய்த பின், சரி ஐச் சொடுக்குக. உரையாடல் பெட்டி மூடும்; உங்கள் மாற்றங்கள் LibreOffice இலிருந்து (விரைவுத்தொடக்கி ஓடிக்கொண்டிருந்தால், அதிலிருந்தும்) வெளியேறி அதனை மீளத்தொடக்கிய பின்னர்தான் செயலாகும் என்ற ஒரு தகவலை நீங்கள் காண்பீர்கள்.

அடுத்த முறை நீங்கள் LibreOffice ஐத் தொடங்கும்போது, அது நீங்கள் சற்று முன்னர் நிறுவிய மொழியில் தொடங்கும்.

----------------------------------------------------------------------
நிரல் அமைவின் போது சிக்கல்
----------------------------------------------------------------------

LibreOffice ஐத் தொடக்குவதிலும் (எ.கா. செயலி நின்றுவிடுதல்) திரையில் காட்டும் சிக்கல்களும் வரைகலை அட்டை இயக்கியால் ஏற்படுகின்றன. இச்சிக்கல்கள் ஏற்பட்டால், உங்கள் வரைகலை அட்டை இயக்கியைப் புதுப்பியுங்கள் அல்லது உங்கள் இயங்குதளத்துடன் வந்த வரைகலை இயக்கியைப் பயன்படுத்த முயலுங்கள். 3D பொருள்களைக் காட்டுவதிலுள்ள சிக்கலை 'கருவிகள் - விருப்பத்தேர்வுகள் - LibreOffice - பார்வை - 3D' இலுள்ள "OpenGL பயன்படுத்து" விருப்பத்தேர்வை நீக்குவதன்வழியும் தீர்க்கலாம்.

----------------------------------------------------------------------
குறுக்கு விசைகள்
----------------------------------------------------------------------

இயங்குதளம் பயன்படுத்தாத குறுவிசைகளை (விசைச் சேர்க்கைகளை) மட்டுமே LibreOffice இல் பயன்படுத்த முடியும். ஏதேனும் விசைச் சேர்க்கைகள் LibreOffice உதவிக் கோப்பில் கூறியபடி வேலை செய்யவில்லை என்றால், முதலில் அதே விசைச்சேர்க்கைகள் இயங்குதளத்தில் பயனில் உள்ளதா என்பதைச் சோதிக்கவும். இத்தகைய முரண்களைச் சரிசெய்ய, உங்கள் இயங்குதளத்தின் விசைச் சேர்க்கைகளை நீங்கள் மாற்றலாம். அல்லது, LibreOffice இலுள்ள எந்த விசைச்சேர்க்கைகளையும் நீங்களே மாற்றலாம். இதைப்பற்றிய மேலதிக விபரங்களுக்கு, LibreOffice இன் உதவிக்கோப்பையோ உங்கள் இயங்குதளத்தின் உதவிக்கோப்பையோ வாசிக்கவும்.

----------------------------------------------------------------------
கோப்பு பூட்டுதல்
----------------------------------------------------------------------

File locking is enabled by default in LibreOffice. On a network that uses the Network File System protocol (NFS), the locking daemon for NFS clients must be active. To disable file locking, edit the soffice script and change the line "export SAL_ENABLE_FILE_LOCKING" to "# export SAL_ENABLE_FILE_LOCKING". If you disable file locking, the write access of a document is not restricted to the user who first opens the document.

Warning: The activated file locking feature can cause problems with Solaris 2.5.1 and 2.7 used in conjunction with Linux NFS 2.0. If your system environment has these parameters, we strongly recommend that you avoid using the file locking feature. Otherwise, LibreOffice will hang when you try to open a file from a NFS mounted directory from a Linux computer.

----------------------------------------------------------------------
Graphic Performance
----------------------------------------------------------------------

By default, LibreOffice favours nice-looking graphics over speed. If you experience slow graphics, switching off 'Tools - Options - LibreOffice - View - Use Anti-Aliasing' may help.

----------------------------------------------------------------------
முக்கிய அனுகல் குறிப்புகள்
----------------------------------------------------------------------

LibreOffice இலுள்ள அனுகல் அம்சங்களைப் பற்றிய மேலதிக தகவலுக்கு, http://www.libreoffice.org/accessibility/ ஐப் பார்க்கவும்

----------------------------------------------------------------------
பயனர் உதவி
----------------------------------------------------------------------

முதன்மை ஆதரவு பக்கமான http://www.libreoffice.org/support/ LibreOffice க்குத் தேவையான பலவித உதவி வாய்ப்புகளை அளிக்கிறது. உங்கள் கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டிருக்கலாம் - சமூக மன்றத்தை http://www.documentfoundation.org/nabble/ இல் சோதித்துப் பார்க்கவும், அல்லது http://www.libreoffice.org/lists/users/ யிலுள்ள 'users@libreoffice.org' அஞ்சல் பட்டியலில் தேடிப் பார்க்கவும். மாற்றாக, உங்கள் கேள்விகளை users@libreoffice.org க்கும் நீங்கள் அனுப்பலாம். அந்த பட்டியலில் பங்களிக்க (அஞ்சல்வழி பதில் பெற) நீங்கள் விரும்பினால், ஒரு வெற்று மின்னஞ்சலை இங்கு அனுப்பவும்: users+subscribe@libreoffice.org.

கூடவே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கானப் பகுதியை http://www.libreoffice.org/faq/ இல் பார்க்கவும்.

----------------------------------------------------------------------
வழுக்கள் & சிக்கல்களின் அறிக்கையிடல்
----------------------------------------------------------------------

Our system for reporting, tracking and solving bugs is currently BugZilla, kindly hosted at https://bugs.freedesktop.org/. We encourage all users to feel entitled and welcome to report bugs that may arise on your particular platform. Energetic reporting of bugs is one of the most important contributions that the user community can make to the ongoing development and improvement of LibreOffice.

----------------------------------------------------------------------
ஈடுபடுதல்
----------------------------------------------------------------------

LibreOffice சமூகம், நீங்கள் இந்த முக்கியமான திறவூற்று செயல்திட்டத்தில் ஆர்வமாக பங்கொவதன்வழி அதிகம் பயன்பெரும்.

ஒரு பயனராக, நீங்கள் இப்போதே இத்தொகுப்பின் மேம்பாட்டுச் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறீர்கள்; சமூகத்தின் நீண்ட கால பங்களிப்பாளராக இன்னும் அதிகமான பங்களிப்பை வழங்கும்படி நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம், தயைகூர்ந்து இணைந்து பங்களிப்பு பக்கத்தை http://www.libreoffice.org/contribution/ இல் பாருங்கள்.

தொடங்குவது எப்படி
----------------------------------------------------------------------

The best way to start contributing is to subscribe to one or more of the mailing lists, lurk for a while, and gradually use the mail archives to familiarize yourself with many of the topics covered since the LibreOffice source code was released back in October 2000. When you're comfortable, all you need to do is send an email self-introduction and jump right in. If you are familiar with Open Source Projects, check out our To-Dos list and see if there is anything you would like to help with at http://www.libreoffice.org/develop/.

குழுவிலிணை
----------------------------------------------------------------------

நீங்கள் இணையக் கூடிய மடலாடற் குழுக்கள் இங்கு உள்ளன http://www.libreoffice.org/contribution/

* செய்திகள்: announce@documentfoundation.org *அனைத்து பயனர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது* (குறைவான போக்குவரத்து)
* முக்கிய பயனர் பட்டியல்: users@libreoffice.org *கருத்தாடல்களைச் சுலபமாக பார்வையிடும் வழி* (அதிக போக்குவரத்து)
* சந்தைபடுத்தும் திட்டம்: marketing@libreoffice.org *மேம்பாட்டிற்கு அப்பால்* (போக்குவரத்து அதிகரிக்கிறது)
* பொது மேம்பாட்டாளர் பட்டியல்: libreoffice@lists.freedesktop.org (அதிக போக்குவரத்து)

ஒன்றுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் இணைய
----------------------------------------------------------------------

குறைந்த மென்பொருள் வடிவாக்க, குறியாக்க அனுபவமே உங்களுக்கு இருந்தாலும், இந்த முக்கிய திறவூற்று செயல்திட்டதிற்கு மிகப்பெரிய பங்கை நீங்கள் அளிக்கலாம். ஆம், நீங்கள்தான்!

புதிய LibreOffice 3.5 உங்களுக்குப் பயனானதாக அமைந்திருக்குமெனவும் இணையத்தில் எங்கள் சமூகத்தில் இணைவீர்களெனவும் எதிர்பார்க்கிறோம்.

லிப்ரெஓபிஸ் சமூகம்

----------------------------------------------------------------------
பயன்படுத்திய / திருத்திய மூலக் குறியீடு
----------------------------------------------------------------------

Portions Copyright 1998, 1999 James Clark. Portions Copyright 1996, 1998 Netscape Communications Corporation.